தமிழக வெற்றிக் கழக மாநாடு - காலை முதலே குவியும் ரசிகர்கள்

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அருகே விஜய் தலைமையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காலைமுதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Oct 27, 2024 - 07:15
0 275
தமிழக வெற்றிக் கழக மாநாடு - காலை முதலே குவியும் ரசிகர்கள்

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அருகே விஜய் தலைமையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காலைமுதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ள நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து கட்சியின் முதல் மாநாட்டை அறிவித்தார். 

அதன்படி, அந்த மாநாடு கொள்கை விளக்கத் திருவிழா என்று பெயரில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் இன்று நடைபெறுகிறது.

இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் அதிகளவு தொண்டர்கள் கூடுவதால் தொழில்நுட்ப சாதனங்கள் இயங்குவதற்கு ஏற்ற வகையில் தற்காலிக செல்போன் டவர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர 700-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள்,  15 ஆயிரம் மின்விளக்குகள், வெகுதொலைவில் இருந்து மாநாட்டை பார்க்கும் வகையில் 600 பெரிய டிஜிட்டல் திரைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

திடலைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 350 நடமாடும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே மாநாட்டு ஏற்பாடுகளை நேற்று மாலை விஜய் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த மாநாடு இன்று மாலை 4 மணியளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக மாநாட்டு மேடைக்கு வரும் விஜய் அங்கிருந்தபடி, ரிமோட் மூலமாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.

மாநாட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தொண்டர்கள், நிர்வாகிகள், ரசிகர், ரசிகைகள் வந்த வண்ணம் உள்ளனர். 

இதனிடையே மாநாட்டிற்கு வந்தவர்கள் விக்கிரவாண்டி, விழுப்புரம், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட விடுதிகளில் அறைகளை புக்கிங் செய்ததால், அங்கு வரும் தொண்டர்கள் ரூம்கள் கிடைக்காமல் வி.சாலை பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User