தங்கைகள் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை "விங்க்" : நிர்வாகிகளை நியமித்து அதிரடி காட்டிய விஜய்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன் - விஜய்

Mar 07, 2024 - 21:58
0 265
தங்கைகள் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை "விங்க்"  : நிர்வாகிகளை நியமித்து அதிரடி காட்டிய விஜய்

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு மகளிர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை அணிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி களத்தில் இறங்கியுள்ள அவர், கட்சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் விஜய் இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக உறுப்பினர் சேர்க்கைக்கென ஒரு அணியை உருவாக்கி அதற்கென நிர்வாகிகளை நியமித்துள்ளார். 

அதன்படி, மாநிலச் செயலாளராக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த விஜயலட்சுமி, மாநில இணைச் செயலாளராக கடலூர் மாவட்டம் வடக்குத்து பகுதியை சேர்ந்த யாஸ்மின், மாநிலப் பொருளாளராக கோவையை சேர்ந்த சம்பத்குமார், மாநிலத் துணைச் செயலாளராக மதுரை மாவட்டம் ஓடைப்பட்டியை சேர்ந்த விஜய் அன்பன் கல்லணை மற்றும் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த பிரபு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறோம். 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம். மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர், கழகத் தோழர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User