பொங்கலுக்கு வருகிறான்  ‘வணங்கான்’- படக்குழு அறிவிப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில் வணங்கான் வெளியீடு என்ற கரும்பின் சுவையைப் பரிசாகத் தருகிறோம் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிப்பு

Nov 19, 2024 - 10:33
Updated: 2 years ago
0 769
பொங்கலுக்கு வருகிறான்  ‘வணங்கான்’- படக்குழு அறிவிப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில் வணங்கான் வெளியீடு என்ற கரும்பின் சுவையைப் பரிசாகத் தருகிறோம் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாலா தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை கொண்டுள்ளார். இவரது படைப்புகள் திரையுலகில் வரவேற்பை பெற்றுள்ளது. பாலாவுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். அந்த வகையில் கடந்த 2018ம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் நாச்சியார் திரைப்படம் வெளிவந்தது. இதுவே இவரின் கடைசி படமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து வணங்கான் என்ற படத்தின் அறிவிப்பை பாலா வெளியிட்டார்.இதன் படப்படிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகினார்.

இதன் பின்னர் அருண் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வணங்கான் பட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து வணங்கான் படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் அருண் விஜய் இயக்குநர் பாலாவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து நேற்று பதிவிட்டார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் வணங்கான் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் பக்கத்தில்,  “கடுமையாக உழைத்துக் கொண்டே இருந்தால் நமக்கான மகிழ்ச்சியான தருணங்களும்...உயர்வும் எப்படியும் வந்துவிடும். திறமையான இயக்குநர் கையால் செய்யப்பட்ட ஆபரணமான "வணங்கான்" உங்கள் வாழ்க்கையில் ஒளிரட்டும். அருண்விஜய் என்ற நல்ல நடிகன் மீது ரசிகர்களின் அன்பு அதிகமாகட்டும். குடும்பத்தினரும் படம் பார்த்து நெகிழ்ந்துள்ளனர். அவர்களின் ஆசியும் நிறையட்டும். இயக்குநர் அண்ணன் பாலாவுக்கு நன்றிகளும்... அன்பும்... ரசிகர்களுக்கும் இப்படம் மிகப் பிடித்தமான படமாக அமைய வேண்டிக்கொள்கிறேன். நிச்சயம் அமையும். விரைவில் உங்களை சந்திப்பான் "வணங்கான்". என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் அருண் விஜய்யின் பிறந்தநாளையொட்டி திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வணங்கான் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,  “தித்திக்கும் உங்களின் இப் பிறந்த நாளில் தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில் வணங்கான் வெளியீடு என்ற கரும்பின் சுவையைப் பரிசாகத் தருகிறோம். மகிழ்ச்சியின் இனிப்பு மனதாரப் பரவி, புன்னகை என்றும் எங்கும் வழிந்தோடி, வெற்றியின் பிள்ளைகளைத் தாலாட்டி வென்று வாழ இயற்கையும்.. இறையும் துணை புரியட்டும். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அருண் விஜய்.” என தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User