50 லட்சத்தைத் தொட்டTVK உறுப்பினர் சேர்க்கை... அதிரடி காட்டும் விஜய்!

உறுப்பினர் சேர்க்கை தொடங்கி 24 மணி நேரத்தில் 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்

Mar 10, 2024 - 14:34
Updated: 2 years ago
0 4.7
50 லட்சத்தைத் தொட்டTVK உறுப்பினர் சேர்க்கை... அதிரடி காட்டும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின்உறுப்பினர் சேர்க்கைக்கான க்யூ ஆர் குறியீடு அறிமுகம் செய்யப்பட்ட இதுவரை 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகரான விஜய் கடந்த மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். வரும் நாடாளுமன்றத்தில் தேர்தலில் போட்டியில்லை என்றும் 2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை நேற்று முன்தினம் (மார்ச் 8) மாலை விஜய் தொடங்கி வைத்ததுடன், கட்சியின் முதல் உறுப்பினராகவும் இணைந்தார்.

மேலும் கட்சியில் உறுப்பினராகச் சேர அழைப்பு விடுத்த விஜய், வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. ‘தோழர்களாய் ஒன்றிணைவோம்’ என்ற தலைப்பில், தமிழக மக்களின் வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாக இணைந்து மக்கள் பணி செய்ய விரும்பினால், கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு கீழே உள்ள உறுப்பினர் சேர்க்கை க்யூ ஆர் குறியீடு இணைப்புகளைப் பயன்படுத்தி உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மட்டுமின்றி அவரது கட்சியில் இணைய ஆர்வமாக இருந்தவர்களும் உறுப்பினர் சேர்க்கைக்கான க்யூ ஆர் குறியீட்டை தங்களை உறுப்பினராக இணைத்து கொண்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கை தொடங்கி 24 மணி நேரத்தில் 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அதன்படி இதுவரை 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாகவும், விரைவில் 2 கோடியை எட்டுவோம் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 40
Dislike Dislike 0
Love Love 15
Funny Funny 5
Wow Wow 6
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User