தவெக தலைவர் விஜய் கூறிய கருத்து சரிதான் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 

இன்று வரை எம்.ஜி.ஆர் புகழ் பேசப்படுகிறது. ஆனால் கருணாநிதியின் புகழை ஒருவர் கூட பேசவில்லை. அவருடைய கட்சிக்காரர்கள் மட்டுமே அவருடைய புகழைப் பேசி வருகின்றனர்.

Oct 30, 2024 - 13:13
0 322
தவெக தலைவர் விஜய் கூறிய கருத்து சரிதான் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 

மத்திய அரசை போன்று திமுக அரசும் பாசிசம்தான். பாசிசம் அல்லாமல் பாயாசமா என்று விஜய் கூறியது சரிதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முத்துராமலிங்க தேவரின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “தேசியமும்,  தெய்வீகமும் தனது இரண்டும் இரு கண்கள் என வாழ்ந்து மறைந்த முத்துராமலிங்க தேவரை பொருத்தவரையில்  கல்வியும் வீரமும் அனைவரும் பெற வேண்டும் கல்வி பெறுவதோடு இல்லாமல் வீரத்தோடு இருக்க வேண்டும் என்கின்ற வகையில் திண்ணை பிரச்சாரம் மூலம் எடுத்துரைத்தார். இதன் மூலம் சுதந்திரப் போராட்டத்திற்கு இளைஞர்களை அதிகமான அளவுக்கு ஈடுபடுத்தியவர். 

மேலும், சென்னையில் மாநகராட்சி விளையாட்டு திடல் தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் விளையாட்டுத்துறைக்கே சாபக்கேடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒடுக்கப்பட்ட மக்கள் விளையாட்டு வீரர்களாக முன்னேறி வருகின்றனர். இந்த செயலின் காரணமாக அவர்கள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மாநகராட்சியின் இந்த செயலின் மூலம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை மழுங்கடிக்ககூடிய துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். 

அதிமுக ஆட்சி காலத்தில் தீபாவளி பண்டிகை  நெருங்கும்பொழுது முன்னதாகவே மீனவர்களுக்கு உதவி தொகை வழங்குவது வழக்கம். ஆனால் திமுக ஆட்சியில் இது வழங்கப்படுவது இல்லை. முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அவருடைய தந்தைக்கு நினைவிடம் கட்ட பணம் இருக்கிறது. பேனா சின்னம் கட்ட பணம் இருக்கிறது. ஆனால் மீனவர்களின் சேமிப்பு பணத்தை உதவித்தொகையாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு வழங்க பணம் இல்லையா? இது மிகவும் கண்டிக்கத்தக்கது. 

தவெக மாநாட்டில் விஜய் கூறியது சரிதான்.  மத்திய அரசு பாசிசத்தை நோக்கி செல்லும் போது, மாநில அரசும் பாசிசம் அல்லாமல் பாயாசமா? என நடிகர் விஜய் சரியாக தான் கூறியுள்ளார். திமுக அரசை எதிர்ப்பவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். திமுகவினரால் எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்படுகிறது. இது பாசிசம் இல்லையா?

அனைத்து விதத்திலும் ஜனநாயக விரோத செயலை செய்து அதன் மூலம் பத்திரிகையாளர்கள், விவசாயிகள்,  ஆகியோர்களை திமுக அரசு ஒடுக்கி வருகிறது. 

எம்ஜிஆர் உலகம் முழுவதும் இரவா புகழாக உள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி துவங்கும் பொழுது அவரது முதல் மாநாட்டில் எம்ஜிஆரை பற்றி பேசினார். தற்பொழுது விஜய் அவருடைய மாநாட்டில் எம்ஜிஆரை பற்றி பேசி உள்ளார். இன்று வரை அவருடைய புகழ் பேசப்படுகிறது. ஆனால் கருணாநிதியின் புகழை ஒருவர் கூட பேசவில்லை. அவருடைய கட்சிக்காரர்கள் மட்டுமே அவருடைய புகழைப் பேசி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User