உதயநிதி டி-சர்ட் வழக்கு - அரசுக்கு உத்தரவு

அரசு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உதயசூரியன் சின்னம் பொறித்த  டி-ஷர்ட் அணிந்து வருவதற்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Oct 29, 2024 - 16:56
0 241
உதயநிதி டி-சர்ட் வழக்கு - அரசுக்கு உத்தரவு

அரசு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உதயசூரியன் சின்னம் பொறித்த  டி-ஷர்ட் அணிந்து வருவதற்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சென்னை சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியகுமார் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், அரசு நிகழ்ச்சிகளில் ஊழியர்கள் முறையான ஆடை அணிந்து வருவதை வலியுறுத்தும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.


ஃபார்மல் பேண்ட் ஷர்ட் அல்லது வேட்டி சட்டை அணிந்து வர வேண்டும் என அரசாணையில் கூறியுள்ள நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிந்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அரசியல் கட்சிகளின் சின்னத்தை வெளிப்படுத்த தடை உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சத்தியகுமார், 


துணை முதலமைச்சர் உதயநிதியின் செயல் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்பதால் முறையான ஆடைகளை அணிந்து வருமாறு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 


இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இந்த அரசாணை பொருந்தும் என விளக்கமளித்தார். 


இதையடுத்து, ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு பொருந்துமா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதில்மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


டி-சர்ட் கேஷுவல் உடையா? என்பதற்கும் அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளிக்குமாறும் உத்தரவிட்டு வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User