”போதை ஏறி போச்சு… ” போலி சாமியார் செய்த அட்ராசிட்டி… பொளந்துக் கட்டிய பக்தர்கள்!

திருவண்ணாமலையில் கஞ்சா போதையில் அட்டூழியத்தில் ஈடுபட்ட போலி சாமியாரை பக்தர்கள் சரமாரியாக அடித்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  

Sep 22, 2024 - 15:03
0 538
”போதை ஏறி போச்சு… ” போலி சாமியார் செய்த அட்ராசிட்டி… பொளந்துக் கட்டிய பக்தர்கள்!

ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மாதம் தோறும் பௌர்ணமி நாட்களில் பல லட்சக்கணக்கான பக்தர்களும் விடுமுறை நாட்களில் கிரிவலம் வருவது வழக்கம். அதன்படி கிரிவலம் வந்த பக்தர்களிடம் விபூதி பூசி விட்டு பணம் பறிக்கும் நோக்கில் கஞ்சா போதையில் போலி சாமியார் ஒருவர் ஈடுபட்டுள்ளார். அப்போது கிரிவலம் வந்த பக்தர்களிடம் போலி சாமியார் கஞ்சா போதையில் கையில் கற்களை தூக்கிக்கொண்டு இளைஞர்களையும், நடைபாதையில் கடை வைத்திருக்கும் நரிக்குறவர் இன பெண்ணையும் தாக்க முயற்சி செய்துள்ளார். 

பின்னர் அங்கிருந்த இளைஞர்கள் போலி சாமியாரை சரமாரியாக அடித்து தாக்கினர். அதனைத் தொடர்ந்து நரிக்குறவர் இன பெண்ணும் போலி சாமியாரை சரமாரியாக தாக்கி சட்டை பிடித்து இழுத்து வந்து செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கிரிவலப்பாதையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட போலி சாமியார்கள் வருகை தந்து கிரிவலப் பாதையில் படுத்து உறங்கியும், பக்தர்களிடம் காணிக்கை கேட்பதும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். 

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறையினர் இதுபோன்று கஞ்சா போதையில் பக்தர்களிடம் அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் போலி சாமியார்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User