கல்லூரி பெண்களிடம் வாலிபர் சில்மிஷம்.. அடித்து துரத்திய பொதுமக்கள்

கரூர் பேருந்து நிலையத்தில் கஞ்சா போதையில் கல்லூரி பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக இளைஞரை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இரும்பு பைப் மூலம் தாக்கி மிரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

Sep 24, 2024 - 13:39
0 331
கல்லூரி பெண்களிடம் வாலிபர் சில்மிஷம்.. அடித்து துரத்திய பொதுமக்கள்

கரூர் பேருந்து நிலையத்தில் கஞ்சா போதையில் கல்லூரி பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக இளைஞரை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இரும்பு பைப் மூலம் தாக்கி மிரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் திருப்பூர் மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும் ட்ராக் முன்பு சுமார் 25 வயதான இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில், பேருந்துக்காக நின்று கொண்டிருந்த கல்லூரி பெண்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கஞ்சா போதையில் இருந்த அந்த இளைஞரை அருகில் இருந்த பேக்கரி கடை ஊழியர்கள் தட்டி கேட்டபோது அவர்களையும் தரக்குறைவாக ஆபாச வார்த்தைகளால் அந்த இளைஞர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த இளைஞரை தட்டி கேட்டுள்ளனர். 

அதையும் பொருட்படுத்தாத அந்த இளைஞர் ஆபாச வார்த்தைகளால் பொதுவெளியில் பேசியதால், ஆத்திரமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இரும்பு பைப் மூலம் போதையில் இருந்த அந்த இளைஞரை தாக்கி, மிரட்டி அங்கிருந்து துரத்தி அடித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் இளைஞரை கையில் இரும்பு பைப்புடன் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மிரட்டும் சம்பந்தப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த இளைஞர் யார் என்பது குறித்து தெரியாத நிலையில், தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த கரூர் நகர போலீசார் அங்கிருந்தவர்களிடம் விசாரித்ததில், காவல்துறையினர் அங்கு வருவதற்கு முன்பாகவே அந்த இளைஞர் பேருந்து நிலையத்தை விட்டு சென்று விட்டார் என்று தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User