மீண்டும் கூடும் திமுக ஒருங்கிணைப்புக் குழு!

2026 தேர்தலுக்காக தயாராகிவரும் நிலையில், இன்று மீண்டும் கூடுகிறது திமுக ஒருங்கிணைப்பு குழு. 

Oct 05, 2024 - 08:49
0 246
மீண்டும் கூடும் திமுக ஒருங்கிணைப்புக் குழு!

திமுகவின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. 

திமுகவில் அமைப்பு ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து துணைத் முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு எ.வ.வேலு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, ஆகிய ஐவர் அடங்கிய குழு திமுகவில் உள்ள பல்வேறு அணிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில் இன்று மேலும் பல்வேறு அணிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது.

நேற்று முன்தினம், திமுகவில் உள்ள தகவல் தொழில் நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, விளையாட்டு பிரிவு அணி ஆகியவற்றுடன் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தியது ஐவர் அடங்கிய குழு. 

இந்த நிலையில் இன்றைய தினம் திமுக மீனவர் அணி, மருத்துவ அணி, சிறுபான்மையினர் அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

2026 தேர்தலுக்காக தீவிரமாக திமுக தயாராகிவரும் இந்த ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User