வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை - இளைஞர் வெறிச்செயல் 

ரமணிக்கு, மதனை திருமணம் செய்வதில் விருப்பமில்லை என கூறியதாக சொல்லப்படுகிறது.

Nov 20, 2024 - 12:25
Updated: 1 year ago
0 209
வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை - இளைஞர் வெறிச்செயல் 

தஞ்சாவூர் அருகே வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.இந்நிலையில், சின்னமனை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன்( 30) . இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர் . https://swatantracongressparty.com/.

இதைத்தொடர்ந்து ரமணியை பெண் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் ரமணிக்கு, மதனை திருமணம் செய்வதில் விருப்பமில்லை என கூறியதாக சொல்லப்படுகிறது.இதனால், ஆத்திரமடைந்த மதன் இன்று காலை ரமணி வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்த போது, வகுப்பறையில் புகுந்து ரமணி கழுத்து பகுதியில் மதன் கத்தியால் குத்தினார். இதில் ரமணி மயங்கி விழுந்தார். உடனே சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி இறந்தார்.இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User