சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10... கலக்க வரும் குட்டீஸ்...

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் பத்தாவது சீசனில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது.

Nov 07, 2024 - 21:46
0 304
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10... கலக்க வரும் குட்டீஸ்...
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10... கலக்க வரும் குட்டீஸ்...

"ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும்" மிகவும் பிரபலமான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியை  விஜய் டிவி விரைவில் ஒளிபரப்ப உள்ளது.  இதில் கலந்துகொள்ள எண்ணற்ற குழந்தைகள் ஆர்வமாக வந்துள்ளனர்.  இந்த போட்டியில் பங்குபெறும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு பின்னணியும். சொல்லமுடியாத கதையும் உள்ளது.  இந்த சீசனின் ஒவ்வொரு குழந்தையின் வரவும் ஒரு கதை சொல்ல உள்ளது. அவர்கள் பொருளாதார ரீதியிலும் மற்ற பல வகைகளிலும் சிரமங்களை சந்தித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிறார்கள். அவர்களுக்கு அவர்களது ஆசிரியர்களும், நண்பர்களும், உறவினர்களும் உதவிகள் செய்து அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரின் கதையும் ஒரு கதை சொல்லும் என்பது உண்மை.   

நஸிரீன் - முதல் ப்ரோமோ

இந்த சீசனின் முதல் ப்ரோமோவில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த போட்டியாளர் ‘நஸிரீன்’ பங்கேற்கும் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.  பள்ளிக்குழந்தைகள் பங்கேற்கும் "பாடுறது பாடுறது யாரு?" என்ற அழகான ப்ரோமோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் நஸிரீனின் ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் வருகின்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. உண்மையில் பள்ளித் தலைமை ஆசிரியர்தான் நஸிரீனுக்கு உதவிசெய்து இந்த போட்டியில் கலந்துகொள்ள அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாராஸ்ருதி (இரண்டாவது ப்ரோமோ )

சென்னையை சேர்ந்த சாராஸ்ருதி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் மிகவும் திறமை வாய்ந்தவர். அவர் தனது பெற்றோருடன் சேர்ந்து தங்கள் வாழ்வாதாரத்திற்காக பாடி வாழ்பவர்கள்.  அவர் இந்த போட்டியில் கலந்துகொண்டு தன் திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற வேண்டும் என முழு முயற்சியில் இருக்கிறார்.

விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், இளம் திறமையான பாடகர்கள் தங்கள் குரலால் பார்வையாளர்களை கவரவுள்ளனர். இந்த பிரபல நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, இளம் தலைமுறையின் பாடகர்களை கண்டு ரசிக்க தயாராகுங்கள்!  சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி விரைவில் விஜய் டிவியில்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User