சிம்ம ராசிக்கான சனி வக்ர பலன்கள்! - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

சிம்மம் ராசிக்கான சனி வக்ர பலன்களை(15.7.2026-30.11.2026] கூறுகிறார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ..

Jul 06, 2026 - 11:30
Updated: 20 days ago
0 214
சிம்ம ராசிக்கான சனி வக்ர பலன்கள்! - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

சிம்ம ராசிக்கான பலன்கள்:

உங்க ராசிக்கு ஆயுள் ஸ்தானத்துல சனிபகவான் வக்ரம் அடைஞ்சிருக்கார்ங்க இது அஷ்டம ஸ்தாளம் என்பதால பயப்பட வேண்டாம்சு. உடல்நலத்துல அக்கறையும் வாகனத்துல நிதானமும் இருந்தா, மற்றதெல்லாம் நன்மையாகவே நடக்கும்க. 

அலுவலகத்துல உங்க திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும்சு அதேசமயம் பொறுப்புகள்ல நிதானமும் நேரடி கவனமும் முக்கியம்க. உங்க பணிகளைப் பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம்க யாரோ செய்யும் தவறுக்கான பழி உங்களைத் தேடி வரலாம். கோப்புகளைப் படிச்சுப் பார்க்காம, கையெழுத்து எதுவும் இடாதீங்க. புதிய பணி வாய்ப்புகள்ல நிதானத்தைக் கடைபிடியுங்க

உங்க வார்த்தைகள்ல இனிமை அதிகரிச்சா இல்லத்திலும் இனிமை கூடும்க வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்க பெற்றோர். பெரியோர் ஆலோசனையைக் கேட்டா, சுபகாரியத் தடைவிலகும்க வாரிசுகள்சிட்டே வீண் வாக்குவாதம் பண்ணாம இருக்கறது. நல்லதுங்க பணவரவு சீராக இருக்கும்க. பழைய கடன்களை பைசல் செய்வதும் செலவுகளை சுப செலவுகளாக மாற்றிக்கறதும் புத்திசாலித்தனம்க

செய்யும் தொழில்ல முடங்காத முயற்சி இருந்தா செழிப்பும் வளர்ச்சியும் படிப்படியா ஏற்படும்க வங்கிக் கடனாகவோ வர்த்தகக் கடனாசுவோ பெருந்தொகையை வாங்கும் முன் அவசியமான்னு யோசியுங்க

அரசுத்துறை, அரசியல் சார்ந்தவங்க, பணிகள் எதையும் முழுமையாகத் திட்டமிட்டும் முறையாகவும் செயல்படுத்தறது அவசியம்க கணக்கு வழக்குகள், பணம் சம்பந்தமான பணிகளைச் செய்யக் கூடியவங்க கூடுதல் கவளமா இருக்கணும்க

கலை படைப்புத் துறையினர் சின்சியரா செயல்பட்டா. உங்கபடைப்புகளை ஊரே போற்றும்க மாணவர்கள் நட்பு வட்டாரத்துல தீய சகவாசம் தெரிஞ்சா, உடனடியா உதறிடுங்க எதிர்பார்த்த வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புகள், கல்வி உதவித்தொகைகள் நிச்சயம் கிட்டும்க.

பெண்கள், அக்கமாகச் செயல்பட்டா, ஆனந்தமா வாழலாம்க. வாக்குல அதிகாரத்தைக் குறைச்சு அன்பை அதிகரிச்சுகிட்டா, வாழ்க்கை செழிக்கும்க வாரிசுகள் வாழ்க்கைல எதிர்பார்த்த மேன்மைகள் கிட்டும்க. நீண்டகாலமா பிரிந்திருந்த உறவும் நட்பும் மீண்டும் வந்து சேரக்கூடிய காலகட்டம்க வாழ்க்கைத் துணைவர்கிட்டே விட்டுக் கொடுத்துப் போறதும் பழைய மனக்கசப்பை மறக்கறதும் அவசியம்க. தேவையற்ற வாக்குறுதிகளை யாகுக்கும் தரவேண்டாம்க

புதிய வாகன அமைப்பு சிலருக்கு கைகூடும்க வாகனப்பழுதை உடனுக்குடன் சீர் செய்யறது அவசியம்க ரத்த அழுத்த * மாறுபாடு, சர்க்கரை, அலர்ஜி. கண் உபாதைகள் வரலாம்க

ஞாயிற்றுக் கிழமைகள்ல அனுமனைக் கும்பிடுங்க. முடிஞ்சா ஒருமுறை பஞ்சவடி திருத்தலம் சென்று அஞ்சுமுக அனுமனை வணங்கிட்டு வாங்க வாழ்க்கை மமைக்கும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User