ஆட்சி அதிகாரத்தில் பங்கு: ஒரே மேடையில் தோன்றும் திருமா-விஜய்-அரசியலில் புதிய பரபரப்பு

டிசம்பர் 6ம் தேதி சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில், விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளனர்.

Nov 02, 2024 - 11:55
Updated: 2 years ago
0 2.4
ஆட்சி அதிகாரத்தில் பங்கு: ஒரே மேடையில் தோன்றும் திருமா-விஜய்-அரசியலில் புதிய பரபரப்பு

சென்னையில் நடக்க உள்ள நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவனும், விஜய்யும் கலந்து கொள்ள உள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

தவெக தலைவர் விஜய் சமீபத்தில் விக்கிரவாண்டி வி.சாலையில் மிக பிரமாண்ட மாநாட்டை நடத்தினார். இதில் லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் கொள்கை மற்றும் கொள்கைத் தலைவர்கள் யார் என்பது குறித்து விளக்கி பேசினார். மேலும் ஆளும் திமுக அரசை கடுமையாக சாடி பேசி இருந்தார். இந்த நிலையில், விஜய்யின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் வரவேற்பும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்  நடிகரும், தவெக தலைவருமான விஜய் மற்றும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் ஆகிய இருவரும் சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிசம்பர் 6ம் தேதி சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில், விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளனர். அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் நூலை வெளியிட விஜய் பெற்றுக் கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.ஆட்சி அதிகாரத்தில் பங்கு என திருமாவளவனும், விஜயும் ஒரே கருத்து நிலைபாட்டை கொண்டிருக்கும் நிலையில் நீண்ட சந்திப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User