ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… தலைமறைவான சீசிங் ராஜாவை சேஸ் செய்து பிடித்தது தனிப்படை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சீசீங் ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

Sep 22, 2024 - 22:06
0 300
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… தலைமறைவான சீசிங் ராஜாவை சேஸ் செய்து பிடித்தது தனிப்படை!

சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடியான நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு, சிடி மணி உட்பட பல்வேறு ரவுடிகள் பெயர்கள் இடம்பெற்றது.  இதுவரை மொத்தம் 28 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். அதோடு, கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறி சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.அதன் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் பதுங்கி இருந்த சீசிங் ராஜாவை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

செம்பியம் தனிப்படை போலீசார் தரப்பை விசாரிக்கும்போது, சீசிங் ராஜாவை அவர்கள் கைது செய்திருப்பதாக எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சீசீங் ராஜாவின் குடும்பத்தினர், சீசிங் ராஜாவை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், சீசீங் ராஜாவின் மனைவி தனது கணவர் காலையில் வெளியில் சென்றவர் இதுவரை வீடு வரவில்லை என்றும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவருக்கு தொடர்பு உள்ளதாக கூறி தனிப்படை போலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தனது கணவருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும், தனது கணவரை போலி என்கவுண்டர் செய்ய உள்ளதாக தகவல்கள் வருகிறது என்பதால் தமிழ்நாடு அரசு தன் கணவரை உயிருடன் மீட்டு தர வேண்டும் என்று தனது கைக்குழந்தையுடன் கண்ணீர் மல்க சீசிங் ராஜாவின் மனைவி பேசியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User