ரத்தன் டாடா உடல்நிலை கவலைக்கிடம்? - வெளியான அதிர்ச்சி தகவல்

மீண்டும் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Oct 09, 2024 - 20:31
0 318
ரத்தன் டாடா உடல்நிலை கவலைக்கிடம்? - வெளியான அதிர்ச்சி தகவல்

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளதாக கூறப்பட்டது. மேலும் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் ரத்தன் டாடா உள்ளதாகவும், அவரின் உடல் நிலை சற்று சவலைக்கிடமாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என ரத்தன் டாடா தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இது குறித்து அவர் எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியதாவது,  “எனது உடல் நிலை குறித்து சமீபத்துல் பரவி வரும் வதந்திகளை நான் அறிவேன். ஆதாரமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டது. நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.  யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை. ஊடகங்களில் தவறான தகவல் பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார். மேலும் ரத்தன் டாடா வழக்கமான பரிசோதனைக்காவே மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User