வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி - ஆதரவாக களமிறங்கும் சோனியா, ராகுல் 

காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் களம் இறக்கப்பட்டுள்ளார்.

Oct 21, 2024 - 10:20
0 526
வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி - ஆதரவாக களமிறங்கும் சோனியா, ராகுல் 
வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி - ஆதரவாக களமிறங்கும் சோனியா, ராகுல் 

வயநாடு மக்களவை இடைத்தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளனர்.

கேரள மாநிலம், வயநாட்டில் நவம்பர் 13-ம் தேதி நடைபெறும் மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். 
இதையொட்டி, நாளை பிரியங்கா காந்தி பிரசாரத்தை தொடங்கும் நிலையில், அவரோடு, காங்கிரஸ் மூத்த தலைவரும், அவரது தாயாருமான சோனியா காந்தி, சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

இதனால் வயநாடு மக்களவை இடைத்தேர்தல் களம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேப்போல் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் களம் இறக்கப்பட்டுள்ளார். இளைஞர்களின் வாக்குகளை கவரும் வகையில் 36 வயதான நவ்யா ஹரிதாஸை பாஜக களம் இறக்கியுள்ளது.

மேலும் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக சோனியா காந்தி, ராகுல் காந்தி களம் இறங்க உள்ள நிலையில், நவ்யா ஹரிதாஸ்க்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்வார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக வயநாட்டில் காங்கிரஸ், பாஜக, சிபிஎம் என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User