குப்பைத் தொட்டியில ஓட்டு போடாதீங்க.. வீணாக்காமல் பாஜகவிற்கு போடுங்க.. சொல்வது ஜி.கே.வாசன்

காங்கிரஸ், அதிமுகவுக்கு போடும் வாக்கு குப்பைத் தொட்டியில் போடுவதற்கு சமம் என்று விமர்சித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

Mar 29, 2024 - 12:21
0 181
குப்பைத் தொட்டியில ஓட்டு போடாதீங்க.. வீணாக்காமல் பாஜகவிற்கு போடுங்க.. சொல்வது ஜி.கே.வாசன்

காங்கிரஸ், அதிமுகவுக்கு போடும் வாக்கு குப்பைத் தொட்டியில் போடுவதற்கு சமம் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த போது அதிமுக, காங்கிரஸ் கட்சியை ஜி.கே.வாசன் கடுமையா விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் களம் அனல் பறக்கிறது. தமிழ்நாட்டில் நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. நட்சத்திர வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சித்தலைவர்கள்
சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமசிவாயத்தை ஆதரித்து  லாஸ்பேட்டை பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், தமிகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க பாடுபட்டு வருகிறோம், ஆனால் புதுச்சேரியில் காமராஜர் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற ஆட்சியை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கி வருகிறார். வருங்கால புதுவையை வளமான புதுவையாக மாற்றக்கூடிய அரசாக இந்த அரசு செயல்படுகிறது. மாணவர்கள் படிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் புதுச்சேரி அரசு செய்து கொடுக்கிறது. லேப்டாப், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

கல்வியில் சிறிய மாநிலங்களில் முதன்மையான மாநிலமாக புதுச்சேரி உள்ளது. இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற அரசாக மத்திய அரசு இருக்கிறது. மீண்டும் மோடி 3 ஆவது முறையாக பிரதமராகும் போது புதுச்சேரியின் பிரதிநிதியை அவரது பக்கத்தில் நீங்கள் அமர வைக்கவேண்டும். 
உங்கள் வாக்கு வீணாகக் கூடது, உங்கள் வாக்கு புதுச்சேரிக்கு நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும், காங்கிரஸ், அதிமுகவுக்கு வாக்களித்தால் அந்த வாக்கு குப்பை தொட்டியில் போட்ட வாக்காக மாறிவிடும் என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார் ஜி.கே.வாசன்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User