நாளை மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்கிறது... வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரம்...

Apr 16, 2024 - 09:12
0 213
நாளை மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்கிறது... வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரம்...

மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலையுடன் முடிவடைவதால் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. அதனால், நாளை ( ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. நாளை 6 மணிக்கு மேல் யாரும் பரப்புரை செய்யக்கூடாது, அப்படிச் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தேர்தல் பரப்புரை நிறைவடையவுள்ள நிலையில், அனைத்துக்கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே தேர்தல் நெருங்கிய நிலையில், வேட்பாளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வினியோகிக்கப்படலாம் என்பதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User