சிம்பு பட இயக்குனரின் மனைவிக்கு கொலை மிரட்டல்.. ரூ. 3 லட்சம் பணம் கையாடல்.. உதவி இயக்குநர் மீது பாய்ந்த வழக்கு

சிம்பு படத்தை இயக்கி வரும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடம் பண மோசடியில ஈடுபட்டதாகவும், அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் உதவி இயக்குனர் முகமது இக்பால் என்பவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Apr 05, 2024 - 13:14
0 312
சிம்பு பட இயக்குனரின் மனைவிக்கு கொலை மிரட்டல்.. ரூ. 3 லட்சம் பணம் கையாடல்.. உதவி இயக்குநர் மீது பாய்ந்த வழக்கு

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் "கண்ணும் கண்ணும் கொள்ளைடித்தால்". இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார். தற்போது அவர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். சென்னை அண்ணாநகர் ஜி பிளாக் 19-வது தெருவில் தேசிங்கு பெரியசாமி வசித்து வருகிறார். இவரது மனைவி திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகள் நிரஞ்சனி. இவரும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் நடித்து இருந்தார். 

இந்த நிலையில் தேசிங்கு பெரியசாமி, அண்ணா நகர் காவல் நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 4) புகார் ஒன்றை அளித்தார்.  அதில், தன்னிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் முகமது இக்பால் என்பவர் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். பணியில் சேர்ந்த நாள் முதல் தன் வீட்டு  வரவு - செலவு கணக்குகளை முகமது இக்பால் கவனித்து வந்தார். 

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுமார் 150 கிராம் தங்க நகைகளை முகமது இக்பாலிடம்  கொடுத்து அண்ணாநகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் அடகு வைத்து பணம் பெற்று வருமாறு அனுப்பி வைத்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார் .

நகையை அடகு வைத்து கிடைத்த 3 லட்ச ரூபாயை  முகமது இக்பால் கையாடல் செய்ததாகவும் பணம் குறித்து கேட்டபோது தனக்கும் தன் மனைவிக்கும்  கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தேசிங்கு பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் உதவி இயக்குனர் முகமது இக்பால் மீது மோசடி, ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User