நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பம்...நாளையே கடைசி நாள்...

மே 5-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டு ஜூன் 14-ம் தேதி முடிவுகள் வெளியீடு.

Mar 08, 2024 - 18:35
0 221
நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பம்...நாளையே கடைசி நாள்...

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன்((மார்ச் 9) நிறைவு பெறுகிறது. 

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2024-25 கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பம் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கியது. www.nta.ac.in, exams.nta.ac.in/NEET என்ற இணையதளங்கள்  மூலம் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்த சூழலில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நாளையுடன் (மார்ச் 9) நிறைவடைகிறது. மே 5-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டு ஜூன் 14-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் மாணவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User