திமுக ஆட்சியில் கொலைகள் குறைந்துள்ளது-ஆர்.எஸ்.பாரதி 

2020ல் அதிமுக ஆட்சியில் 1,675 கொலைகள் நடந்துள்ளது.ஆனால் இந்த ஆண்டு 799 கொலைகள்தான் நடந்துள்ளது.

Nov 21, 2024 - 13:24
Updated: 1 year ago
0 334
திமுக ஆட்சியில் கொலைகள் குறைந்துள்ளது-ஆர்.எஸ்.பாரதி 

திமுக ஆட்சியில் தமிழகத்தில் கொலைகள் குறைந்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற உத்தரவை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் இபிஎஸ்ஸின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் நடந்த ஊழல் தொடர்பாக திமுக சிபிஐ விசாரணை கேட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி மனசாட்சியை அடகு வைத்து விட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

அதிமுக ஆட்சியில் 570 கோடி ரூபாய் கண்டெய்னர் லாரியில் கட்டு  கட்டாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து சிபிஐ இதுவரை என்ன விசாரணை செய்தது என கேள்வி எழுப்பினார்.கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு https://indiamahendra.com/ அரசு தகுந்த முறையில் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி யோகியரை போல கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மேல் முறையீடு கூடாது என கூறுகிறார். 

அதிமுக ஆட்சியில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டார்கள். சட்டம் ஒழுங்கு என்ன என்பதை எடப்பாடி பழனிசாமி அறிந்து கொள்ள வேண்டும். தூத்துக்குடியில் 13 பேரை எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சுட்டுக் கொன்றனர். அம்மா... அம்மா... என்று மூச்சுக்கு 300 தடவை கூறும் அவர்கள் கடைசி காலத்தில் அம்மா வாழ்ந்தது கொடநாட்டில் மட்டும்தான். கொடநாட்டில் இருந்து கோட்டையை இயக்கியவர்தான் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். மேலும் தமிழ்நாட்டில் நடைபெறும் தனிப்பட்ட கொலைகளை எல்லாம் சட்டம் ஒழுங்குடன் இணைத்து பேசுவது சரியல்ல. திமுக ஆட்சியில் கொலைகள் குறைந்துள்ளது. 

அதிமுக ஆட்சியில் ஒரு லட்சம் கொலைகள் நடந்துள்ளது இதை நான் ஆதாரத்தோடு கூறுவேன்.2020ல் அதிமுக ஆட்சியில் 1,675 கொலைகள் நடந்துள்ளது.ஆனால் இந்த ஆண்டு 799 கொலைகள்தான் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் 71% மக்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர். சமீபத்தில் நடந்த கொலைகளுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த சம்பவங்கள் தவிர்க்க முடியாத ஒன்று தெரிவித்தார்.அதிமுக ஆட்சியில் நுங்கம்பாக்கத்தில் பட்ட பகலில் நடந்த சுவாதியின் கொலை என்ன ஆனது என கேள்வி எழுப்பினார். அதேபோல் அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் என்ன ஆனது என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User