காதலியுடன் அநாகரிகமான ரீல்ஸ் - கண்டித்த மொட்ரோ ஊழியருக்கு அடி

மெட்ரோ ரயில் நிலையத்தில் காதலியுடன் அநாகரிகமான முறையில் ரீல்ஸ் செய்த கல்லூரி மாணவரைக் கண்டித்த மெட்ரோ ஊழியர் மீது தாக்குதல் நடத்திய மூன்று கல்லூரி மாணவர்கள் கைது. 

Sep 25, 2024 - 16:21
Updated: 2 years ago
0 325
காதலியுடன் அநாகரிகமான ரீல்ஸ் - கண்டித்த மொட்ரோ ஊழியருக்கு அடி
arrest

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள நேரு பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று மாலை கல்லூரி மாணவர் ஒருவர் தனது காதலியுடன் அநாகரிகமான முறையில் இன்ஸ்டா ரீல்ஸ்க்காக வீடியோ எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறதுய். அப்போது அங்கு கண்காணிப்பாளராக பணியில் இருந்து ஆகாஷ் என்கிற மெட்ரோ ரயில் ஊழியர் அம்மாணவர்களிடம் இங்கு வீடியோ எடுக்கக்கூடாது எனக் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த ஊழியருக்கும், கல்லூரி மாணவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் உன்னை வந்து பார்த்து கொள்கிறேன் எனக்கூறி விட்டு அக்கல்லூரி மாணவர் தனது காதலியுடன் காதலியுடன் கிளம்பிச் சென்றுள்ளார். 

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் தனது 2 நண்பர்களை அழைத்துக் கொண்டு வந்த அந்த மாணவர், வீடியோ எடுக்கக் கூடாது எனச் சொன்னது நீதானே எனக்கூறி மெட்ரோ ஊழியர் ஆகாஷை சரமாரியாக தாக்கி உள்ளனர். 

இத்தக்குதலால் காயமடைந்த ஊழியர் ஆகாஷ் கீழ்பாக்கம் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து ஊழியரை தாக்கிய கல்லூரி மாணவர்களைக் கண்டுபிடித்தனர். சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (18) மற்றும் அவரது நண்பர்கள் சூளையை சேர்ந்த விஜி (21) மற்றும் ஆண்டன் டேவிஸ்(20) ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அம்மூன்று பேர் மீது, ஆபாசமாகப் பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு  விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 3
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User