தவெக ஆட்சி கவிழுமா? இடதுசாரிகள் கொடுத்த ரியாக்ஷன்..!

தவெக ஆட்சிக் கவிழும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதைத் தொடர்ந்து, இட்துசாரிகள் கொடுத்த பதிலடி அறிவாலயத்தை ஆட்டம் காண வைத்துள்ளது 

Jul 01, 2026 - 13:00
0 183
தவெக ஆட்சி கவிழுமா? இடதுசாரிகள் கொடுத்த ரியாக்ஷன்..!

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் இட்துசாரிகள் பங்கேற்ற போவதில்லை முன்னரே அறிவித்திருந்தாலும், இட்துசாரிக் கட்சித் தலைவர்கள் முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதாவது, கூட்டணி கட்சிகளுடனான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர், இன்று(ஜூலை 1) காலை முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “தவெக ஆட்சியிலும் கூட்டணியிலும் நாங்கள் அங்கம் வகிக்கவில்லை. அதனால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது போல தவெக அரசு கவிழும் நிலை இல்லை. தவெக அரசுக்கு இடதுசாரிகளின் ஆதரவு தொடர்ந்து இருக்கும்” என்று தெரிவித்தனர்.

மேலும், காவிரி உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு முன்பு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, ஒருமித்த கருத்தை உருவாக்கிய பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

அதேபோல், தமிழ்நாடு அரசின் வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் மக்கள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்றும், அரசுத் துறைகளில் நடைமுறையில் உள்ள ஒப்பந்த பணியாளர் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக மாநிலச் செயலாளர்கள் கூறினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User