மின்சார உதடுகள்- மனசு

"மின்சார உதடுகள்" என்பது வாழ்க்கை, மரணம், காதல், ஆன்மிகம் மற்றும் மனித மனத்தின் ஆழங்களை ஆராயும் வித்தியாசமான நாவலாகத் தெரிகிறது. "செத்து செத்து விளையாடலாமா?" என்ற நகைச்சுவை வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான எல்லைகளை கேள்விக்குள்ளாக்கும் சிந்தனைகளை இந்த நாவல் முன்வைக்கிறது. பல்வேறு தத்துவங்கள், ஆன்மிகக் கருத்துகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை இணைத்து, வாசகர்களை ஒரு புதிய சிந்தனைப் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. எழுத்தாளர் "ஒளித்துகள்" தனது தனித்துவமான நடைமுறையால், இறையன்பும் மனித உணர்வுகளும் கலந்த ஒரு ஆழமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறார்.

Jun 12, 2026 - 07:00
0 144
மின்சார உதடுகள்- மனசு
மாலைமதி

11.மனசு

'மின்சார உதடுகள்' எனத் தொடங்கி, மேக்ஸ்வெல் சொன்னது சயின்ஸ் ஃபிக்ஷன் கதை மாதிரி இருந்தது. அன்றைக்குத் தேதி 26.8.25
"மனிதர்களில் மூளை என்று ஒன்று மண்டைக்குள் உள்ளது என எல்லாருக்கும் தெரியும். ஆனால், அதில் மனசு என்று ஒன்று எப்படி உருவாகிறது?" என்று சில்வியா தேடினாள்.
"மனசு என்றால் என்ன?" சீரியஸாக, உலகின் முக்கியமான கேள்வி கேட்டார் மேக்ஸ்வெல்.
"மனசை சின்னச் சின்னதா உடைச்சா வருகிற சின்னத் துண்டுகள் மெமரி என்கிற ஞாபகங்கள். அவற்றை ஒன்றாகச் சேர்த்தால் சுயநினைவு என்கிற கான்ஷியஸ்னெஸ் வரும்! மனசை, மொத்த நினைவுகள் எனலாம்."
நிக்கோலஸ் சில்வியாவின் ஹாஸ்டல் வீட்டுக்குள் சென்று மஹிமாவின் அறையைத் திறந்தார். உள்ளே, ஒரு நாற்காலியில் ஒரு பெண் கட்டிப் போடப்பட்டு, வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு அமர வைக்கப்பட்டிருந்தார். பார்ப்பதற்கோ வயதான சில்வியா மாதிரி இருந்தார்.
நிக்கோலஸ் அதிர்ச்சியோடு திரும்பி இனியாவை அழைக்கலாம் என்று நினைத்தார்.
அப்போது..

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User