KKR vs SRH: நடப்பு சாம்பியனுக்கு KKR-க்கு இப்படி ஒரு நிலையா? ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

IPL2025: ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதுகின்றன. இந்தப்போட்டி, இன்று இரவு 7:30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

Apr 03, 2025 - 12:42
0 247
KKR vs SRH: நடப்பு சாம்பியனுக்கு KKR-க்கு இப்படி ஒரு நிலையா? ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதரபாத்

கடந்த மாதம் மார்ச் 22 ஆம் தேதி 10 அணிகளுடன் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்  மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. மிகவும் விறுவிறுப்பாக தொடங்கிய ஐபிஎல் இன்று 15-வது போட்டியை எட்டியுள்ளது. 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

நடப்பு தொடரில், ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைர்ரைடர்ஸ் அணி இதுவரை ஆடிய 3 போட்டிகளில் இரண்டில் தோல்வியை தழுவியுள்ளது. முதல் போட்டியில், ஆர்சிபி அணியுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் அணியுடனான போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில், மும்பை அணியுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 3 போட்டியில் ஒருவெற்றியை பெற்ற கேகேஆர் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

சன்ரைசர்ஸ் ஐதரபாத்

ஐபிஎல் தொடரில் எதிரணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்து சிம்ம சொப்பனமாக விளங்கிய சன்ரைசர்ஸ் அணி, இந்த தொடரில் கடைசி 2 போட்டிகளில் தோல்வியை தழுவியிருக்கிறது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில், ஐதராபாத் 8-வது இடத்தில் உள்ளது.

இரண்டு அணிகளும் தங்களது 2-வது வெற்றிக்காக போராடி வரும் நிலையில், இன்றையப்போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

நேருக்கு நேர் 

ஐ.பி.எல்-லில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் இதுவரை 28 போட்டிகளில் மோதியுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 போட்டிகளிலும்,  கொல்கத்தா அணி 19 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User