கள்ளச்சாராய மரணங்கள்.. சிபிஐ விசாரணை தேவை.. சட்டசபையில் பொங்கிய எடப்பாடி பழனிச்சாமி

கள்ளச்சாரயம் குடித்து மரணமடைந்தவர்கள் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய CBI விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Jun 22, 2024 - 11:28
0 299
கள்ளச்சாராய மரணங்கள்.. சிபிஐ விசாரணை தேவை.. சட்டசபையில் பொங்கிய எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தட்டுப்பாடு என்ற சொன்ன மருந்து வேறு, மா சுப்பிரமணியன் சொல்லும் மருந்து வேறு. விஷ சாராய முறிவுக்கான மருந்தை நான் சொன்னேன், ஆனால் அவர் அல்சர் மருந்தை சொல்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.கள்ளச்சாரய மரண விவகாரத்தில் உண்மை   குற்றவாளிகளை கண்டறிய CBI விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று 3ஆம் நாள் கூட்டம் தொடங்கியது. அதிமுக எம்எல்ஏக்கள் இன்றும் கறுப்பு சட்டை அணிந்து வந்தனர். கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து விவாதிக்க அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் அப்பாவுவிடம் முறையிட்டனர். அதனை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டார். அமைதியாக அமருங்கள் பின்னர் நீங்கள் பேசுவதற்கு நேரம் தருகிறேன் என்று கூறினார்.

எதிர்கட்சி தலைவரை பேச அனுமதி தர வேண்டும் அதிமுகவினர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். கள்ளச்சாரயம் விவாகரம் குறித்து பேச அனுமதி வழங்காததை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவாகரத்தில்  எங்களை பேச அனுமதிக்க வில்லை என கூறினார்.

மது அருந்தியவர்கள்,இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்தும்,சிகிச்சை பெறுபவர்கள் நிலை என்ன என்பது குறித்து அறிய பேச அனுமதி கேட்டும், சபாநாயகர் அனுமதி தரவில்லை.கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 183 பேர் பாதிக்கப்பட்டு,55 பேர் இறந்துள்ளதாக செய்தி வருகிறது என கூறிய அவர் அரசு மெத்தன போக்கு கடைப்பிடிக்கிறது என தெரிவித்தார்.

அரசு மருத்துவமனையில் விஷ முறிவு மருந்துகள்  இல்லை என குற்றம்சாட்டினார். கள்ளச்சாரயம் குடித்தவர்கள் மருத்துவமனைக்கு தாமதமாக வந்ததால் உயிரழப்பு என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பொய்யான தகவலை தருகிறார். உயிரிப்புக்கு அரசு தான் காரணம் என தெரிவித்த அவர்,கள்ளச்சாரயத்தால் 
இறந்தவர்கள் அனைவரையும் வெவ்வேறு காரணங்களால் இறந்ததாக கூறியதால் தான் உயிரழப்பு அதிகரிக்க காரணம் என தெரிவித்தார். 

உயிரிழந்தவர்கள் கள்ளச்சாரயத்தால் இறக்க வில்லை என  மாவட்ட ஆட்சியர் கூறிய தவறான தகவல் தான் கள்ளச்சாரய மரணம் அதிகரித்தது காரணம் என கூறினார்.திமுக,கூட்டணி கட்சியினர் கள்ளச்சாராயம் விவகாரம் முதல்வர்களுக்கு தெரியாது என கூறுவது ஏற்க்க முடியாது என தெரிவித்தார். திமுகவினர்க்கும்,காவல்துறையினர்க்கும் இதில் தொடர்பு இருக்கிறது என்றும் நீதி கிடைக்க வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும் நடத்த வேண்டும் என கூறினார்.

ஒரு நபர் விசாரணையில் உண்மை வெளி வராது. உண்மை குற்றவாளிகளை அடையாளம் காட்ட வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும் என கூறினார். கேள்வி நேரம் முடிந்த உடன் அனுமதி தரப்படும் என சபநாயகர் கூறினாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி,மக்களின் பிரச்சனை உயிர் சென்று கொண்டிருக்கிறது இதை விட முக்கிய பிரச்சனை என்ன உள்ளது என தெரிவித்தார்.

கடந்த காலத்தில் சட்டபேரவையில் திமுகவினர் எப்படி நடந்துகொண்டார்கள் என அனைவருக்கும் தெரியும் என கூறிய அவர் திமுக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருப்பதற்க்கு 25 ஆண்டுகாலம் ஒப்பந்தம் போட்டுவிட்டதால் திமுகவிற்கு எதிராக காங்கிரஸ் பேச மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User