IPL இன்றைய ஆட்டம் : முதல் வெற்றியை பதிவு செய்ய பஞ்சாப்பை பதம் பார்க்குமா லக்னோ..?

இன்று இரவு லக்னோவில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியில், முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

Mar 30, 2024 - 07:58
0 396
IPL இன்றைய ஆட்டம் : முதல் வெற்றியை பதிவு செய்ய பஞ்சாப்பை பதம் பார்க்குமா லக்னோ..?

இன்று இரவு லக்னோவில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியில், முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

17 வது ஐபிஎல் போட்டிகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மட்டுமே இரண்டு போட்டிகள் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ளன.

நேற்று (மார்ச் 29) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியில், கொல்கத்தா அணி வெற்றிப் பெற்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று நடைபற்ற ஆட்டத்தில், விராட் கோலி 83 ரன்கள் விளாவியும் பெங்களூரு அணி தோல்வியடைந்தது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

இன்று (மார்ச் 30) இரவு 7.30 மணிக்கு லக்னோவில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் மோதுகின்றன. லக்னோ அணி தனது முதல் ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல் அணியிடம் தோல்வியடைந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தேயாக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

பஞ்சாப் கிங்ஸ் அணி இதற்கு முன்னதாக நடந்த இரண்டு போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்யுமா? அல்லது லக்னோ தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா? என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User