ஊர்ந்து போன உங்கள் பெயரையா வைக்க முடியும்- இபிஎஸ்ஸை கடுமையாக சாடிய முதலமைச்சர்

பொய் சொல்லலாம் ஏக்கர் கணக்கில் பொய் சொல்ல கூடாது. இனிமேல் பொய் சொல்லலாம், பழனிசாமி அளவிற்கு பொய் சொல்ல கூடாது என சொல்ல வேண்டும் என்றார். 

Nov 10, 2024 - 14:27
0 290
ஊர்ந்து போன உங்கள் பெயரையா வைக்க முடியும்- இபிஎஸ்ஸை கடுமையாக சாடிய முதலமைச்சர்

தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட கலைஞர் பெயரை சூட்டாமல்  பதவி சுகத்துக்காக கரப்பான் பூச்சி மாதிரி ஊர்ந்து போன உங்கள் பெயரை வைக்க முடியுமா என எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் ரூ.417.21 கோடி மதிப்பீட்டில் 57 ஆயிரத்து,556 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 837.66 கோடி மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் வழங்கினார். பின்னர் விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  “திமுக ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில்  இது வரை 10 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்கப்பட்டுள்ளது. நில உரிமையை வழங்கும் ஆட்சியாக திராவிட மாடல் திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது. உங்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியே தனக்கு பாராட்டு என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது மக்களைப்பற்றி கவலைப்படாத எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, கலைஞர் பெயரில் பயன்படாத திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பொய் சொல்லி வருகிறார். பொய் சொல்லலாம் ஏக்கர் கணக்கில் பொய் சொல்ல கூடாது. இனிமேல் பொய் சொல்லலாம், பழனிசாமி அளவிற்கு பொய் சொல்ல கூடாது என சொல்ல வேண்டும் என்றார். மேலும் உங்கள் ஆணவத்தால் எடப்பாடி பழனிசாமி அவர்களே தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறீர்கள் எனவும் தொடர்ந்து மக்கள் உங்களை தோற்கடிப்பார்கள் என்றார்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட கலைஞர் பெயரை சூட்டாமல்  பதவி சுகத்துக்காக கரப்பான் பூச்சி மாதிரி ஊர்ந்து போன உங்கள் பெயரை (பழனிசாமி) வைக்க முடியுமா என்று வினா எழுப்பிய முதலமைச்சர், கலைஞரின் புகழ் வெளிச்சம் பழனிசாமியின் கண்ணை கூசுகிறது என்று கடுமையாக சாடினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User