இன்ஸ்டாகிராமில் எல்லை மீறிய பழக்கம்-இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டிய மகன், தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Nov 12, 2024 - 16:51
0 291
இன்ஸ்டாகிராமில் எல்லை மீறிய பழக்கம்-இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
இன்ஸ்டாகிராமில் பழகி ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மகன் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் வசித்து வரும் 23 வயது பெண் ஒருவர், கல்லூரி விடுமுறை நாட்களில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்நிலையில் மேற்படி பெண், R-9 வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சுஜித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் பேசும்போது தமது அந்தரங்க புகைப்படங்களை பதிவு செய்து வைத்து கொண்டு சுஜித் பணம் கேட்டு மிரட்டினார். ஆரம்பத்தில் இளம்பெண்ணும் சுஜித்திற்கு பணம் அனுப்பி வந்ததாகவும், பின்னர் மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பணம் ரூ.50,000 அனுப்ப வேண்டும் என்று சுஜித் மற்றும் அவரது தந்தை வின்சென்ட் கூறியுள்ளனர். தன்னிடம் பணம் இல்லையென்று இளம்பெண் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுஜித் இளம்பெண்ணின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளதாக கூறி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் பின்னர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
இது குறித்து, R-9 வளசரவாக்கம் காவல் நிலைய போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்க்கொண்டனர். R-9 வளசரவாக்கம் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்ததில், மேற்படி புகார்தாரர் கூறியது உண்மையென தெரியவந்துள்ளது.
அதன்பேரில் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட சுஜித் (27) கன்னியாகுமரி மாவட்டம், மற்றும் மேற்படி குற்ற செயலுக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை வின்சென்ட் (55)ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User