அரசு மருத்துவர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு -அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை

மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ள நிலையில் மருத்துவ சங்கத்தினருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Nov 13, 2024 - 13:44
0 869
அரசு மருத்துவர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு -அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை

சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் சங்கத்தினர் நாளை ஸ்டிரைக் அறிவித்துள்ள நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பாலாஜி ஜெகநாதன் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று மருத்துவர் பாலாஜியை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார். 

விக்னேஷ் தாயாருக்கு ஒரு மாத காலமாக புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்ற கோபத்தில் கத்தியால் குத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த கத்திக்குத்து சம்பவத்தால் மருத்துவமனை வளாகமே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விக்னேஷ் பயன்படுத்தியதாக கூறப்படும் கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மருத்துவருக்கு கழுத்து, காதுக்கு பின்புறம், நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் மருத்துவருக்கு கத்திக்குத்தியால் குத்தப்பட்டுள்ளார்.உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளதாகவும், தற்போது நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 மணி நேரத்திற்கு பிறகு தான் மருத்துவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டபதன் எதிரொலியாக உயிர்காக்கும் சிகிச்சையை தவிர மற்ற அனைத்து பிரிவு மருத்துவர்களும் நாளை பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் உடமைகளை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும் என உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் மருத்துவ சங்கத்தினருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User