உச்சம் தொட்ட தங்கம் விலை.. இப்போ என்ன விலை தெரியுமா?

தங்கம் விலை மீண்டும் ராக்கெட் வேகத்தில் ஏறத்தொடங்கியுள்ளது. இன்று தீபாவளி என்பதால், தங்கம் வாங்க நிறைய பேர் ஆர்வம் காட்டி வரும் நிலையில், சவரன் 60 ஆயிரம் ரூபாய்த்தை நெருங்கி நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Oct 31, 2024 - 12:57
0 242

கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார நிலையற்ற தன்மை, பணவீக்கம், புவிசார் பதட்டங்கள் ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறு வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 59 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஏழாயிரத்து 455 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

இந்த ஆண்டின் முடிவிற்குள் ஒரு சவரன் தங்கம் விலை 60 ஆயிரத்தை நெருங்கும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இன்று தீபாவளி என்பதால், தங்கம் வாங்க நிறைய பேர் ஆர்வம் காட்டி வரும் நிலையில், சவரன் 60 ஆயிரம் ரூபாய்த்தை நெருங்கி நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User