இளம்பெண் மரணத்தில் மர்மம்… போராட்டத்தில் இறங்கிய பெற்றோர்… 

திருவள்ளூர் அருகே, இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Mar 26, 2024 - 23:17
0 157
இளம்பெண் மரணத்தில் மர்மம்… போராட்டத்தில் இறங்கிய பெற்றோர்… 

திருவள்ளூர் அருகே, இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ஷாலினி (24) என்பவருக்கும், வேப்பம்பட்டு  திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த  முரளிதரன் (27) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் குழந்தை பிறக்காத நிலையில், முரளிதரன் ஷாலினியை அடிக்கடி துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 24) ஷாலினி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடல் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதேநேரம், ஷாலினி உயிரிழந்ததை அவரது உறவினர்களுக்கு தெரிவிக்காமலும் காவல் நிலையத்தில் தாமதமாக வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிகிறது. 

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்,  சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, அங்கிருந்தவர்கள் வாக்குவாதம் செய்தனர். பின்னர், பெண்ணின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெறும் என காவல்துறையினர் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User