இபிஎஸ் ஆணையிட்டால் ஓபிஎஸ்-க்கு எதிராக இதை செய்வோம்... ஆர்.பி.உதயகுமார் சூளுரை!

எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால் ஒ.பி.எஸ் எங்கும் நடமாட முடியாத அளவிற்கு போராட்டம் நடத்துவோம் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.

Oct 24, 2024 - 11:44
0 297
இபிஎஸ் ஆணையிட்டால் ஓபிஎஸ்-க்கு எதிராக இதை செய்வோம்... ஆர்.பி.உதயகுமார் சூளுரை!

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மதுரை கேகே.நகர் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ”21 ஆம் தேதி இராஜபாளையத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒ.பி.எஸ் குறித்து நான் பேசியதை இ.பி.எஸ் குறித்து பேசியதாக சமூக வலைதளத்தில் போலியாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி பெயரில் திரித்து வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து உள்ளோம்.

துரோகி ஒ.பி.எஸ் தூண்டுதலால் என்னை பற்றி திரித்து வெட்டி சேர்த்து அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் ஒ.பி.எஸ் வீட்டை முற்றுகையிடுவோம். எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால் ஒ.பி.எஸ் எங்கும் நடமாட முடியாத அளவிற்கு போராட்டம் நடத்துவோம்” என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User