திருநங்கைகளை வைத்து இயக்குநர்கள் படம் இயக்குவதில்லை - சீனுராமசாமி பேச்சு

'சைலண்ட்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் சீனுராமசாமி, திருநங்கையை வைத்து எந்த ஒரு இயக்குநரும் இவ்வளவு தைரியமாக முதல் படம் செய்ய மாட்டார்கள் என்று கூறினார்.

Nov 27, 2024 - 17:52
Updated: 2 years ago
0 456
திருநங்கைகளை வைத்து இயக்குநர்கள் படம் இயக்குவதில்லை - சீனுராமசாமி பேச்சு

அறிமுக இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சைலண்ட்'. எஸ்.ஆர்.ட்ரீம் ஸ்டுடியோஸ் (SR Dream Studios) சார்பில், எஸ்.ராம் பிரகாஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சென்னை தெற்கு ஐ.ஆர்.எஸ், ஜி.எஸ்.டி கூடுதல் இணை ஆணையர் சமய முரளி, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். 

இயக்குநர் கணேஷா பாண்டி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஆரத்யா கதாநாயகியாக நடித்துள்ளார். தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், சமயமுரளி, அறம் ராம்ஸ், பிக்பாஸ் நமீதா, மாரிமுத்து ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் வரும் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து  'சைலண்ட்' படத்தின்  இசை வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் சீனுராமசாமி பேசியதாவது, 'சைலண்ட்' என ஒரு ஆங்கில படம் பார்த்தேன், அந்த மாதிரி படமாக இருக்கும் என நினைத்து வந்தேன். ஆனால் இந்தப்படம் மிகப்பெரிய விசயத்தைப் பேசுகிறது. திருநங்கையை வைத்து எந்த ஒரு இயக்குநரும் இவ்வளவு தைரியமாக முதல் படம் செய்ய மாட்டார்கள். நானும் என் படங்களில் திருநங்கைகளுக்கு மரியாதை செய்யும் காட்சிகள் வைப்பேன். இவர்களும் அதேபோல் மிகவும் அற்புதமாகப் படமாக்கி இருக்கிறார்கள்.

நான் சிறு வயதில் இருந்தே யார் சொல்லும் விமர்சனத்தையும் கேட்கமாட்டேன். திரையரங்கில் படம் பார்த்த பிறகு தான் விமர்சனம் படிப்பேன். ஆனால், அப்போது இருந்து இப்போது வரை சிறு முதலீட்டு படங்களுக்கு  ஆதரவு தருவது, ஊடகங்கள் தான். ரிவ்யூ இல்லாததால் சின்ன படங்கள் வருவதே தெரிவதில்லை. மக்கள் கருத்தை வாங்கி  ஒளிபரப்ப மீடியாக்களை அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.  தொடர்ந்து சிறு படங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறினார்.

தொடர்ந்து, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது, 'சைலண்ட்' திரைப்படத்திற்கு  இசையமைத்துள்ள சமயமுரளி எனக்கு நண்பர். அவர் ஒரு அரசு அதிகாரி. ஆனால், இசை மீதான ஆர்வத்தால் தொடர் முயற்சி செய்து தற்போது இசையமைப்பாளராக மாறியுள்ளார். 

இப்போது சினிமாவில் விமர்சனம் வரக்கூடாது எனச்  சொல்லி வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை விமர்சனங்களை எப்போதும் வரவேற்பேன். இன்றைய காலகட்டத்தில் முதல் ஷோவில் கூட்டம்  வரவில்லை எனும் போது அடுத்த ஷோ காலியாகி விடுகிறது. இந்த நிலையில் விமர்சனங்கள் வர வேண்டும், வரவில்லை என்றால் அந்தப்படம் வருவதே தெரிவதில்லை. இந்த விசயத்தில் திரைத்துறையினர் முறையாகப் பேசி  முடிவெடுக்க வேண்டும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User