நிறைசூலி தீபிகா படுகோனே.. பேபி பம்ப் போட்டோ சூட்.. காதலுடன் கூடவே கணவர் ரன்வீர் சிங்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். கர்ப்பமாக இருந்த போதும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.இப்போது நிறைமாத கர்ப்பிணியாக தனது கணவருடன் போட்டோ சூட் நடத்தி அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Sep 03, 2024 - 11:04
0 503
நிறைசூலி தீபிகா படுகோனே.. பேபி பம்ப் போட்டோ சூட்.. காதலுடன் கூடவே கணவர் ரன்வீர் சிங்
deepika padukone and ranveer singh photo shoot

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே தன்னுடைய கணவருடன் நிறைசூலியாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், 2006ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான 'ஐஸ்வர்யா' என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவரை பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க வைக்க தேர்வு செய்தவர் ஷாருக்கான் தான். 2007-ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற 'ஓம் ஷாந்தி ஓம்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.பிஸியான நடிகையாக இருந்தாலும் ஷாருக்கான் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.முன்னணி நடிகையாக இருக்கும் போதே பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வந்தார். பல ஆண்டு கால காதல் வாழ்க்கையில் கடந்த 2018ஆம் ஆண்டு கல்யாணத்தில் முடிந்தது. தீபிகா படுகோனேவும் ரன்வீர் சிங்கும் இத்தாலியில் மிக பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடித்து வந்த தீபிகா கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். கல்கி 2898 AD படத்தின் புரமோசன் விழாக்களில் கர்ப்பமான வயிற்றுடன்  ப்ரோமோஷனில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் தீபிகா படுகோனே. கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருக்கும் தீபிகா படுகோனே நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

இதில் தன்னுடைய கணவர் ரன்வீர் சிங்குடன் ரொமான்ஸ் செய்தபடியும் தீபிகா படுகோன் போஸ் கொடுத்துள்ளார். கூடிய விரைவில் அழகிய குழந்தையை பெற்றெடுக்க உள்ள தீபிகா, ரன்வீர் சிங் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Wow Wow 1
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User