கொக்கைன் போதைப்பொருளை விற்கச் சென்ற இளைஞர்... மடக்கிப் பிடித்த போலீஸ்...

Apr 16, 2024 - 10:14
0 392
கொக்கைன் போதைப்பொருளை விற்கச் சென்ற இளைஞர்... மடக்கிப் பிடித்த போலீஸ்...

சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அமைந்தகரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித் திரிந்த இளைஞரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது, விலை உயர்ந்த போதைப்பொருளான கொக்கைனை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 

அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை கொளத்தூர் பெரவள்ளூர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்றும், கொளத்தூரில் உள்ள ஆசிரியர் காலனியில் போதைப்பொருளை விற்பனை செய்யச் செல்வதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவரிடம் இருந்த 120 கிராம் கொக்கைன் போதைத்பொருளை பறிமுதல் செய்த போலீசார், லோகேஷை கைது செய்தனர். மேலும் போதைப்பொருள் எங்கிருந்து கிடைத்தது? யார் இதனை சப்ளை செய்தது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User