”நண்பர் சூப்பர்ஸ்டார்...” – ரஜினி நலம் பெற முதலமைச்சர் போட்ட பதிவு!

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் நலம்பெற எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

Oct 01, 2024 - 08:06
0 290
”நண்பர் சூப்பர்ஸ்டார்...” – ரஜினி நலம் பெற முதலமைச்சர் போட்ட பதிவு!

கடந்த மாதம் 28ம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து கூலி படப்பிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்பினார். கூலி படப்பிடிப்பில் மழை காட்சியில் நடித்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்காரணம் அடுத்த கட்ட நடவடிக்கையாக  மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து விட்டுத் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. 

அடி வயிறு வீக்கம், முதுகு பிரச்னைகளுக்காக தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதய சிகிச்சை நிபுணரின் பரிசோதனைக்கு பின்னரே ரஜினியின் அடுத்த கட்ட சிகிச்சை குறித்தும், எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருக்கலாம் என்பது குறித்தும் தகவல் வெளியாகும் என்று கூறப்பட்டது. 

இந்த நிலையில், ரஜினி விரைவில் நலம்பெற எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என்று முதலமைச்சர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User