ஆழ்கடலுக்கு சென்ற மீனவர் மாயம்... கவலையில் மூழ்கிய காசிமேடு மீனவர்கள்...

கடலோர காவல் படை போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Mar 17, 2024 - 15:22
0 144
ஆழ்கடலுக்கு சென்ற மீனவர் மாயம்...  கவலையில் மூழ்கிய காசிமேடு மீனவர்கள்...

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர் மாயமானதால், அவரை தேடும் பணியில் கடலோர காவல்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த  மைக்கேல் ராஜ் (41), தனது மனைவியை பிரிந்து மகள்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். மீனவரான இவர், கடந்த செவ்வாய்க்கிழமை 10 பேருடன் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்றுள்ளார். தொடர்ந்து, மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும்போது, மகாபலிபுரம் அருகே மைக்கேல் ராஜ் படகில் இருந்து தவறி விழுந்ததாக கரை திரும்பிய சக மீனவர்கள் அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காசிமேடு காவல் நிலையத்திற்கு சென்ற மைக்கேல் ராஜின் மகள்கள், மீன்பிடிக்க சென்ற தனது தந்தை காணவில்லை என புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், மீன்பிடி துறைமுக இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கடலோர காவல் படை போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் மாயமான சம்பவம், காசிமேடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User