முதலமைச்சருக்கு ஞாபக மறதியா..? இல்லை குற்ற உணர்ச்சியா..? - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி...

கச்சத்தீவு குறித்து தேர்தல் நேரத்தில் ஞாபகம் வருவது விந்தையாக இருக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்..

Mar 16, 2024 - 21:24
0 228
முதலமைச்சருக்கு ஞாபக மறதியா..? இல்லை குற்ற உணர்ச்சியா..? - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி...

கச்சத்தீவு குறித்து தேர்தல் நேரத்தில் ஞாபகம் வருவது விந்தையாக இருக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்..

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளப்ப பக்க பதிவில், "கச்சத்தீவு குறித்து  1974 ஆம் ஆண்டு, தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது, மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால், கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. அதன் பிறகு கச்சத்தீவு விவகாரத்தில் கள்ள மௌனம் சாதிக்கிறது திமுக. தேர்தல் காலங்களில் மட்டும் கச்சத்தீவு குறித்து ஞாபகம் வருவது விந்தை. கச்சத்தீவு விஷயத்தில் திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி செய்தது துரோகம். 

இலங்கைப் போரின்போது, ஆளுங்கட்சியாக இருந்தும், திமுக நடத்திய மூன்று மணி நேர உண்ணாவிரதம் உள்ளிட்ட கபட நாடகங்களை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அதன் பின்னர்தான் நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதும் மிகவும் அதிகரித்தது. 

திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இலங்கை கடற்படையினரால், 80-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, ஊழல் செய்வதில் மும்முரமாக இருந்த திமுக, தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு, இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட போது, திமுக அன்றும் மௌனமாகத்தான் இருந்தது. அவர்களை பத்திரமாக மீட்டது பிரதமர் மோடி அரசு.

பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகிறார்கள். ஐம்பது ஆண்டுகள் மௌனமாக இருந்து கொண்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு குறித்துப் பேசும் மு.க.ஸ்டாலின் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User