கருணாநிதி குடும்பத்தை தவிர தலைமை பொறுப்பு யாருக்கும் கிடையாதா? – எச்.ராஜா கேள்வி!

கருணாநிதி குடும்பத்தைத் தவிர திமுகவில் தலைமை பொறுப்பு யாருக்கும்  கிடையாது என்று பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா தெரிவித்துள்ளார். 

Sep 29, 2024 - 12:35
0 299
கருணாநிதி குடும்பத்தை தவிர தலைமை பொறுப்பு யாருக்கும் கிடையாதா? – எச்.ராஜா கேள்வி!

தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா 68 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காரைக்குடி தனியார் திருமண மஹாலில் கேக் வெட்டி கொண்டாடினார். தமிழக முழுவதும் இருந்து வருகை தந்துள்ள கட்சி நிர்வாகிகள் எச்.ராஜாவுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மகளிர் அணி சார்பில் மாலை அணிவித்து மலர் கிரீடம் அறிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, “ 60, 70 வருடங்கள் திமுக உழைத்தவர்களுக்கு தலைமை பொறுப்பில் இடம் கிடையாது. கருணாநிதி குடும்பத்தைத் தவிர திமுகவில் தலைமை பொறுப்பு யாருக்கும்  கிடையாது என்பது தான் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி.  ஹிந்து விரோதி திமுகவின் அடுத்த தலைவர் என்பதில் முக்கியத்துவம் இல்லை.

கே. என். நேரு ஆன்மீகவாதி என்பதால்  திமுகவில் அவருக்கு முக்கியத்துவம் இல்லை. பாஜக ஒரே டீம் அது மோடி டீம். திமுக ,அதிமுகவுக்கு பாஜக B team மாக  இருக்க வேண்டாம். அதிமுகவும் திமுகவும் பாஜக B டீம் என கூறுவதற்கு நாங்கள் பதில் சொல்ல தேவையில்லை” என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User