"சவக்குழிக்கு சென்ற சட்டம்-ஒழுங்கு ; தலைதூக்கிய துப்பாக்கி, வெடிகுண்டு கலாசாரம்" - அரசுக்கு இபிஎஸ் கண்டனம்...

சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Mar 15, 2024 - 15:14
0 191
"சவக்குழிக்கு சென்ற சட்டம்-ஒழுங்கு ; தலைதூக்கிய துப்பாக்கி, வெடிகுண்டு கலாசாரம்" - அரசுக்கு இபிஎஸ் கண்டனம்...

மருதுசேனை கட்சியின் நிறுவனர் ஆதிநாராயணன் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயற்சித்த சம்பவத்திற்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப்பதிவில், "மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மருதுசேனை கட்சியின் நிறுவனர் ஆதிநாராயணனின் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. 

திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி, அதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதை தொடர்ச்சியாக தான் சுட்டிக்காட்டி கண்டித்து வரும் நிலையில், தற்போது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாசாரமும் தமிழ்நாட்டில் தலைதூக்கியிருப்பது வருத்தத்திற்கும், கடும் கண்டனத்திற்கும் உரியது.

சவக்குழிக்கே சென்றுவிட்ட தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை உடனடியாக மீட்டெடுத்து, சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரிடம் இதனை வலியுறுத்துகிறேன்." என அவர் குறிப்பிட்டுள்ளார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User