இளமையைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி?

இளமையைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய பழக்கங்கள்.

Jun 14, 2026 - 02:30
0 452
இளமையைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி?

இளநரை, முகச்சுருக்கங்கள், பருக்கள் போன்ற பிரச்னைகள் 20-25 வயதுக்குள்ளாகவே அதிகரித்து, வயது முதிர்ந்த தோற்றத்தை உருவாக்குகின்றன.

தீர்வு: வாழ்வியல் முறையைச் சீராக்குவது 

சருமத்துக்கு வெளிப்புற பராமரிப்பு செய்தாலும் சிலருக்கு சரும பிரச்னைகள் தீவிரமாக இருக்கும். சருமத்தை உள்ளிருந்து சுத்தம் செய்யும் சத்துகளின் குறைபாடு இதற்கு காரணமாக இருக்கலாம்.

தீர்வு: உணவுத் தட்டில் குறைந்தது 20 கிராம் புரதம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சரிவிகித உணவுப் பழக்கத்தை வழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும். சரும நலனுக்கு அவசியமான இரும்புச்சத்து, வைட்டமின் B12 மற்றும் D3 நிறைந்த உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். பால் பொருள்களை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. தயிர், மோர் சாப்பிடலாம். மற்றபடி சீஸ், பனீர் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

முதுமைத் தோற்றம் ஏற்பட முக்கிய காரணம் மோசமான உணவுப் பழக்கங்கள், ஜங்க்உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு சுவை கொண்ட உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள்.

தீர்வு: ஆரோக்கியமான உணவுடன் தினமும் 30 நிமிடங்கள் உடலை ஃபிட் டாக்கும் உடற்பயிற்சியும் தேவை.

தினமும்7-8 மணி நேரம் தூக்கம் அவசியமான நிலையில், குறைவான தூக்கம் சருமம், உடல்நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தூக்க நேரம் தவறுவதால் ஹார்மோன் சமநிலை குலைந்து, மெலடோனின் உற்பத்தியும் குறைகிறது.

தீர்வு: இரவில் சரியான நேரத்தில் தூங்கி, (7-8 மணி நேரம்) தரமான தூக்கத்தைப் பெற வேண்டும். தூங்கும் முன்பு கேட்ஜட் சாதனங்களை தவிர்ப்பதன் மூலம் மெலடோனின் சுரப்பு சீராக இருக்கும். தூக்கமின்மையால் வரும் சரும பாதிப்பும் தவிர்க்கப்படும்.

இளவயதிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு பழக்கங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தீர்வு: புகைப்பழக்கம் மற்றும் மது பழக்கம். இளமையாக இருக்க விரும்பினால் இத்தகைய பழக்கத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.

வறண்ட சருமம், கருவளையம், சன் டேன் போன்ற பிரச்னைகள் சருமத்தின் பளபளப்பை குறைத்து மந்தமான தோற்றத்தை உண்டு செய்யும்.

தீர்வு: சருமத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க மாய்சுரைசர் மற்றும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவது அவசியம். சோப்புக்கு மாற்றாக சருமத்துக்கு ஏற்ற ஃபேஸ் வாஷைப் பயன்படுத்தலாம். மருத்துவரின் ஆலோசனையுடன் ரெட்டினால் போன்ற சீரம்களை பயன்படுத்தலாம். சரும பராமரிப்பு எல்லா வயதினரும் செய்ய வேண்டிய ஒன்று.

கூந்தலை வெளிப்புறமாகப் பராமரிக்கிறோம். ஆனால் உள்ளிருந்து கூந்தலுக்கு போதுமான சத்துக்கள் இல்லையென்றால் கூந்தல் பொலிவிழந்து, வறண்டு, முடி உதிர்தலையும் ஏற்படுத்தும்.

தீர்வு: புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த சமச்சீர் உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும். கீரைகள், பருப்பு வகைகள், முட்டை, மீன், பழங்கள் போன்றவை முடி ஆரோக்கியத்திற்கு உதவும். குறிப்பாக இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் முடி உதிர்வைக் கட்டுப்படுத்த இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் உதவக்கூடும். போதுமான தண்ணீர் குடிப்பதும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User