விஜய் ஏன் அதிமுகவை விமர்சிக்கவில்லை? - இபிஎஸ் சொன்ன வித்தியாசமான பதில்

வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒத்த கொள்கைகளுடன் கூடிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Oct 29, 2024 - 14:27
0 256
விஜய் ஏன் அதிமுகவை விமர்சிக்கவில்லை? - இபிஎஸ் சொன்ன வித்தியாசமான பதில்

வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒத்த கொள்கைகளுடன் கூடிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தீபாவளி பண்டிகையையொட்டி நலிந்த தொழிலாளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிதி உதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாட்டில் நல்ல தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு விஜய் பேசியதற்கு களங்கம் கற்பிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். 

த.வெ.க உடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ஒத்த கொள்கைகளுடன் கூடிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என தெரிவித்தார்.

மேலும், அதிமுக குறித்து தவெக மாநாட்டில் விஜய் விமர்சனம் செய்யாதது குறித்து கேள்வி எழுப்பியப்போது, அதிமுக சிறப்பாக செயலபடுவதால் விஜய் விமர்சனம் செய்யவில்லை என தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர் அனைவரும் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததுடன், நீலகிரியில் உள்ள அரசு தேயிலை தோட்ட கழக ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User