மீண்டும்..மீண்டுமா?: இவங்க ரகளை தாங்க முடியல- அராஜகம் செய்யும் மாணவர்கள் 

அரஜாகத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நந்தனம் கல்லூரியை சேர்ந்தவர்கள் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

Oct 10, 2024 - 16:36
0 219
மீண்டும்..மீண்டுமா?: இவங்க ரகளை தாங்க முடியல- அராஜகம் செய்யும் மாணவர்கள் 

சென்னையில் மாநகர பேருந்தின் மேற்கூரை மீது ஏறி கல்லூரி மாணவர்கள் அராஜகம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கிண்டி செல்லம்மாள் கல்லூரி அருகே மாநகர பேருந்தில் ஏறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மாநகர பேருந்து மேற்கூரையில் நின்று அராஜகத்தில் ஈடுபட்டனர்.சென்னை தி.நகரிலிருந்து குன்றத்தூர் வரை செல்லக்கூடிய 88கே மாநகர பேருந்தில் இன்று மதியம் திடீரென 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேற்கூரை மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்டனர். 

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தவுடன் உடனடியாக கல்லூரி மாணவர்கள் கலைந்து சென்றனர். சுமார் அரை மணி நேரமாக மாணவர்கள் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரஜாகத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நந்தனம் கல்லூரியை சேர்ந்தவர்கள் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

ரூட் தல பிரச்சனையில் மாநில கல்லூரி மாணவரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இணைந்து தாக்கி கொலை செய்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் கல்லூரி மாணவர்கள் பேருந்து மேற்கூரை மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரூட் தல விவகாரத்தில் அராஜகத்தில் ஈடுபட்டடால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தும் மாணவர்களின் இதுபோன்ற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User