”யாருடனும் பணியாற்ற காத்துக்கிடக்கல…” - விஜய் படத்தால் வந்த சிக்கல்… கொதித்துப்போன சிம்ரன்…!

 விஜய்யை வைத்து படம் தயாரிப்பதாக நடிகை சிம்ரன் குறித்து வெளியான தகவலுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sep 22, 2024 - 19:36
0 390
”யாருடனும் பணியாற்ற காத்துக்கிடக்கல…” - விஜய் படத்தால் வந்த சிக்கல்… கொதித்துப்போன சிம்ரன்…!

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஜோடிகளில் ஒன்று விஜய்-சிம்ரன் ஜோடி தான். இருவரும் இணைந்து துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா போன்ற பல படங்களில் நடித்தவர்கள். சிம்ரனை பொறுத்தவரை அவர் முன்னணி ஹீரோயினாக இருந்த காலக்கட்டத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த படங்கள், அதன் பாடல்கள் என அனைத்தும் இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட சிம்ரன், சமீப காலமாக சில படங்களின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரஜினிக்கு ஜோடியாக பேட்ட படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், விஜய்யை வைத்து சிம்ரன் ஒரு படம் தயாரிக்க நினைத்ததாகவும், அதற்கு விஜய் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் வைரலான நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் சிம்ரன்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிம்ரன், ”இதுவரை நான் அமைதி காத்தது போதும். இதற்குமேல் பொறுத்துக் கொள்ள முடியாது. நான் எந்த பெரிய ஹீரோ உடனும் பணியாற்ற காத்துக் கிடக்கவில்லை. என்னுடைய குறிக்கோள் வேறு, ஒரு பெண்ணாக என்னுடைய எல்லைகள் என்ன என்பது எனக்கு தெரியும்.

பல ஆண்டுகளாக சோஷியல் மீடியாவில் என் பெயரை குறிப்பிட்டு, வேறொருவருடன் தொடர்புபடுத்தி வதந்திகள் வந்தபோதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டேன். சுயமரியாதை தான் முதலில் முக்கியம். எனவே, STOP என சொல்வது பெரிய வார்த்தை தான். அது தான் தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சரியாக இருக்கும். யாரும் என்னுடைய உணர்வுகளை புரிந்துக் கொள்ளவில்லை. 

நான் எந்நாளும் என் பெயரை பயன்படுத்தி அட்வாண்டேஜ் எடுத்துக் கொண்டதில்லை. எது சரியோ அதற்காக நான் நின்றுள்ளேன். அதையே தான் சினிமாத்துறையில் உள்ள மற்றவர்களிடம் இருந்தும் எதிர்பார்க்கிறேன். பொய்யான செய்தி பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என சிம்ரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

மிக கோவமாக சிம்ரன் வெளியிட்டுள்ள இந்த பதிவு இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User