Sardar 2: கார்த்தியின் சர்தார் 2-வில் சம்பவம் இருக்கு... என்ட்ரியான எஸ்ஜே சூர்யா!

கார்த்தியின் சர்தார் 2ம் பாகத்தில் எஸ்ஜே சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Jul 16, 2024 - 13:31
0 598
Sardar 2: கார்த்தியின் சர்தார் 2-வில் சம்பவம் இருக்கு... என்ட்ரியான எஸ்ஜே சூர்யா!
சர்தார் 2ம் பாகத்தில் இணைந்த எஸ்ஜே சூர்யா

சென்னை: அஜித்தின் வாலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. தொடர்ந்து விஜய் நடித்த குஷி படத்தையும் இயக்கிய எஸ்ஜே சூர்யா, அடுத்து அவரே ஹீரோவாக களமிறங்கினார். ஆரம்பத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், நண்பன் படத்தில் அவரது கேமியோ ரோலும், இறைவி படத்தின் கிளைமேக்ஸில் உருக வைத்ததும், எஸ்ஜே சூர்யாவுக்கு சூப்பரான ரீச் கொடுத்தது. இதனையடுத்து ஹீரோ, வில்லன் என வெரைட்டியாக நடிக்கத் தொடங்கினார் எஸ்ஜே சூர்யா.  

கோலிவுட், டோலிவுட் என இரண்டு பக்கமும் எஸ்ஜே சூர்யாவின் கால்ஷீட்டுக்காக முன்னணி இயக்குநர்களும் ஹீரோக்களும் காத்திருக்கின்றனர். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2, கேம் சேஞ்சர் இரண்டு படங்களிலும் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சிம்புவுடன் மாநாடு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட மேலும் சில படங்களிலும் மரண மாஸ் காட்டியிருந்தார் எஸ்ஜே சூர்யா. முக்கியமாக மார்க் ஆண்டனி படத்தில் ஜாக்கி பாண்டியனாக எஸ்ஜே சூர்யா அடித்த அட்ராசிட்டியில், தியேட்டரே அதகளமானது. அதோடு மார்க்கெட்டே இல்லாமல் துவண்டுகிடந்த விஷால், மார்க் ஆண்டனி மூலம் கம்பேக் கொடுக்க எஸ்ஜே சூர்யா தான் காரணம் என ரசிகர்களே கூறினர். 

தற்போது சீயான் விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார் எஸ்ஜே சூர்யா. இதுதவிர அரை டஜனுக்கும் அதிகமான படங்களை கையில் வைத்துள்ள எஸ்ஜே சூர்யா, படு பிஸியாக வலம் வருகிறார். கோடிகளில் சம்பளம் கொடுத்து எஸ்ஜே சூர்யாவை புக் செய்ய தயாரிப்பாளர்களும் ரெடியாக உள்ளனர். இந்நிலையில், கார்த்தியின் சர்தார் 2 படத்தில் எஸ்ஜே சூர்யா இணைந்துள்ளது ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸாக அமைந்துள்ளது. கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான ஜப்பான், எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. இது கார்த்தியின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதனைத் தொடர்ந்து மெய்யழகன், வா வாத்தியாரே படங்களில் நடித்துள்ள கார்த்தி, அடுத்து இயக்குநர் பிஎஸ் மித்ரனுடன் இணைந்தார். 2022ம் ஆண்டு இக்கூட்டணியில் வெளியான சர்தார் முதல் பாகம், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஆர்மி ஆபிஸர், போலீஸ் என அப்பா, மகனாக கார்த்தி இரண்டு கேரக்டர்களில் நடித்த இப்படம், ஆக்ஷன் ஜானரில் உருவாகியிருந்தது. பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சம்பவம் செய்திருந்தது. கடந்த வாரம் சர்தார் 2 பூஜை விழா நடைபெற்றது. மேலும் படப்பிடிப்பு ஜூலை 15ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது சர்தார் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதோடு, அடுத்த அப்டேட்டாக எஸ்ஜே சூர்யா இணைந்துள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தில் எஸ்ஜே சூர்யா கமிட்டாகியுள்ளதால் சர்தார் 2 மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும், சர்தார் 2ம் பாகத்தில் கார்த்திக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சர்தார் 2-வில் செம என்டர்டெயினிங் இருக்கும் என்பது கன்ஃபார்ம். இந்தப்படத்தில் கார்த்தி ஜோடியாக பாலிவுட் ஹீரோயின் ஒருவரை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். அதற்கு முன்பாகவே எஸ்ஜே சூர்யா கமிட்டானதை சர்தார் 2 டீம் அபிஸியலாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User