ரசிகர்களுடன் ’பிளடி பெக்கர்’ படம் பார்த்த கதாநாயகன் கவின்

நடிகர் கவின், தான் நடித்த ப்ளடி பெக்கர் திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டு களித்தார். ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். 

Oct 31, 2024 - 13:53
0 267
ரசிகர்களுடன் ’பிளடி பெக்கர்’  படம் பார்த்த கதாநாயகன் கவின்

நடிகர் கவின், தான் நடித்த ப்ளடி பெக்கர் திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டு களித்தார். ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். 

 சீரியல் பிரபலமாக வலம் வந்த கவின், தற்போது கோலிவுட்டின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். சீரியல், பிக் பாஸ், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என மெல்ல மெல்ல சினிமாவில் அடியெடுத்து வைத்த கவின், டாடா திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்தார்.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் கவினுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இளன் இயக்கத்தில் வெளியான ஸ்டார் படத்திலும் தனது நடிப்பால் ஸ்கோர் செய்திருந்தார் கவின். இந்த வரிசையில் அடுத்து ஒரு ஹிட் கொடுக்க காத்திருக்கும் கவின் நடிப்பில், பிளடி பெக்கர் திரைப்படம் இன்று ரிலீசானது.

சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படங்களுடன் வரும் தீபாவளிக்கு ரிலீசாகியுள்ளது பிளடி பெக்கர். சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரித்துள்ளார். கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகந்தா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள பிராட்வே சினிமாஸில் படத்தின் கதாநாயன் கவின், காமெடி நடிகர் கிங்ஸ்லி உள்ளிட்டோர் கண்டுகளித்தனர். அப்போது படம் பார்க்க வந்த ரசிகர்கள் அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

படம் பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவின், ரசிகர்களுடன் படத்தை பார்த்தது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். தீபாவளிக்கு வந்த திரைப்படங்கள் நான்கும் வெவ்வேறு விதமான கதைகளத்தை கொண்டது என்றும், ப்ளடி பெக்கர் படமும் அனைவரும் பார்க்கக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். அடுத்தடுத்து 3 படங்களில் கதாநாயகனாக நடித்து வருவதாகவும் கவின் கூறினார். 

What's Your Reaction?

Like Like 4
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 3
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User