அதிகாலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு... பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி! 

துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக     நடிகர் கோவிந்தா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Oct 01, 2024 - 13:27
Updated: 2 years ago
0 251
அதிகாலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு... பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி! 

பாலிவுட்டில் தன் முகபாவனைகளை கொண்டே பலரது கவனத்தையும் பெற்றவர் கோவிந்தன். ‘உஸ்னே ஹே சுஹானா’, ’கிஸ்ஸி டிஸ்கோ மே ஜாஹேன்’ போன்ற பாடல்கள் மூலம் பட்டித் தொட்டி எங்கும் போய் சேர்ந்தவர். தமிழில் த்ரி ரோசஸ்(3 Roses) திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.  இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கோவிந்தா, தற்போது அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். 

இந்த நிலையில், துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நடிகர் கோவிந்தா அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மும்பையின் ஜூஹூ பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் கோவிந்தாவின் மனைவி கொல்கத்தா சென்றிருந்ததால், மும்பையில் உள்ள வீட்டில் கோவிந்தா மட்டும் தனியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இன்று அதிகாலை நடிகர் கோவிந்தாவும் மும்பையில் இருந்து விமானம் மூலம் கொல்கத்தா செல்ல திட்டமிட்டிருந்தார். காலை 6 மணிக்கு மும்பையில் இருந்து கொல்கத்தாவிற்கு விமானம் என்பதால், அதிகாலையிலேயே தனது வீட்டில் இருந்து புறப்படத் தயாராகியுள்ளார். 

அப்போது அவர் தனது ரிவால்வர் துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டிருக்க, அது தவறுதலாக வெடித்துள்ளது. இதில் துப்பாக்கி குண்டு கோவிந்தாவின் காலில் பாய்ந்துள்ளது.  இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதிகாலை 4.45 மணியளவில் கோவிந்தாவின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதுகுறித்து ஜூஹூ பகுதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனையடுத்து கோவிந்தாவின் வீடு அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதோடு, உடனடியாக அவரது காலில் இருந்த குண்டும் அகற்றப்பட்டது. கோவிந்தாவின் உடல்நிலை சீராக இருப்பதால், விரைவில் அவர் வீடு திரும்புவார் என சொல்லப்படுகிறது.

தனது உடல்நலம் குறித்து நடிகர் கோவிந்தாவும் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது துப்பாக்கி வெடித்ததில் கால் முட்டியில் குண்டு பாய்ந்தது. தற்போது அது நீக்கப்பட்டு தான் நலமாக இருப்பதாகவும், மருத்துவர்களுக்கும், தான் நலமுடன் திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User