தப்பியோடிய இளைஞர்....ரவுண்டு கட்டிய போலீசார்...

ஏரியில் முட்புதரில் பதுங்கி இருந்த இளைஞர் 24 மணி நேரத்தில் கைது.

Mar 19, 2024 - 08:26
0 167
தப்பியோடிய இளைஞர்....ரவுண்டு கட்டிய போலீசார்...

வாணியம்பாடியில் கைது செய்து அழைத்துச் சென்றபோது போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோடிய  இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார். 

திருப்பத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவர், பெண் ஒருவரின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்வதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த கதிர்வேலை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள  நீதிபதியின் வீட்டின் முன்பு  கதிர்வேலை  நிறுத்தி வைத்திருந்தபோது திடீரென  போலிசாரை  தள்ளிவிட்டு அவர் தப்பியோடினார். இதையடுத்து கதிர்வேலின் தாய்க்கு வரும் அழைப்புகளை கண்காணித்து வந்த போலீசார், 24 மணி நேரத்தில் கணவாய்புதூர் ஏரியில் முட்புதரில் பதுங்கியிருந்த அவரை சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்...

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User