இந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை

கரூர், மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Oct 31, 2024 - 07:01
0 765
இந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை

கரூர், மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User